டெல்லி: இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் 5ஜி இணைய சேவை அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. குஜராத்தில் மட்டுமே 33 நகரங்களில் 5ஜி இணைய சேவை செயல்பாட்டில் உள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களில் 5ஜி இணையசேவை பயன்பாட்டில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.
