வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: எல்லை பிரச்னை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யங்ட்சேயில், கடந்த 9 ம் தேதி சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக நம் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து பார்லிமென்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் செயலாளர் கரின் ஜீன் பியரே கூறுகையில், ” மோதலை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மோதலுக்கு பிறகு இரு தரப்பு வீரர்களும் அங்கிருந்து விலகி சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பல வழிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement