வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தோஹா: உலக கோப்பை கால்பந்து இரண்டாவது அரை இறுதியில் மொரோக்கோவை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் . இதையடுத்து பைனலில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது பிரான்ஸ்
கத்தாரில் 22வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. லுசெய்ல் மைதானத்தில் நடந்த முதலாவது அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் துவங்கிய 34வது நிமிடத்தில், பெனால்டி முறையில் நட்சத்திர வீரர் மெஸ்சி, முதல் கோல் அடித்து அர்ஜென்டினா அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.
![]() |
தொடர்ந்து குரோஷியா அணி வீரர்களின் கோல் போடும் முயற்சி, கானல் நீராக, இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா, எளிதாக பைனலுக்கு முன்னேறியது.
இன்று(டிச.,.15) நடந்த மற்றொரு இரண்டாவது அரை இறுதியில் பிரான்ஸ், மொரோக்கோ அணிகள் மோதின. ஆட்டம் துவங்கிய 5வது நிமிடத்தில் பிரான்சின் தியோ ஹெ ர்னாண்டஸ் விரைவாக ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் பிற்பகுதியில் 79வது நிமிடத்தில் ராண்டல் கோலோலோ முவானி அசத்தலாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 2.- 0 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ், மொரோக்கோவை வீழ்த்தி பைனலுக்கு நுழைந்துள்ளது.
இதையடுத்து வரும் டிச., 18-ல் நடக்கவுள்ள பைனலில் பிரான்ஸ் , அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement