தஞ்சை: தஞ்சையில் கடும் பனிப்பொழிவு தஞ்சை பெரிய கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுகிறது. தஞ்சை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடுமையான மழை பொழிகிறது. நேற்று முழுவதும் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் நின்று அதிகாலை திடீரென கடும் பனிப்பொழிவு பனிப்பொழிவு காலை 8 மணிக்கு மேல் எடுத்ததால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் பாதிப்பு. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காலையிலேயே வந்து அடுத்த கோவிலுக்கு செல்லலாம் என்ற இந்த நிலையில் கோபுர தரிசனம் செய்ய முடியாமல் பனிப்பொழிவால் பணி விலகும் வரை காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். மேலும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.