தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், 4 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
6 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறையோடு சேர்த்து, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதே போல சி.வி.மெய்யநாதன், பழனிவேல் தியாகராஜன், சேகர்பாபு, முத்துசாமி, ராஜ கண்ணப்பன், ஆர்.காந்தி ஆகிய 6 அமைச்சர்களுக்கும் கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.