Taapsee Pannu: நான் என்ன மிருகமா? ஆவேசமாக சீறிய நடிகை டாப்ஸி!

நான் என்ன மிருகக் காட்சி சாலையில் உள்ள மிருகமா என கேட்டு சீறியுள்ளார் நடிகை டாப்ஸி.

நடிகை டாப்ஸிபிரபல மாடலாக வலம் வந்த டாப்ஸி பன்னு தெலுங்கு படத்தின் மூலம் திரை உலகில் அடியெடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரைத்துறையில் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜன கன மன, ஏலியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.Hansika Motwani: விவாகரத்து… திருமணம் ஆன கையோடு ஹன்சிகாவுக்கு இப்படி ஒரு சோதனையா?
அடிக்கடி சர்ச்சைஇதேபோல் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் டாப்ஸி. பாலிவுட் சினிமாவிலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை டாப்ஸி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். நடிகை கங்கனா ரனாவத்துடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வரும் டாப்ஸி அவ்வப்போது பத்திரிகையாளர்களிடமும் மல்லுக்கட்டி வருகிறார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு எடக்குமுடக்காக பதில் சொல்வது, அவர்களுடன் வேண்டுமென்றே வாக்குவாதம் செய்வது, பதிலுக்கு எதிர்த்து கேள்வி கேட்பது என பல முறை தலைப்பு செய்தியாகியுள்ளார் டாப்ஸி.மகாலட்சுமியால் எமோஷனலான ரவீந்தர்!
கடும் கோபம்இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை டாப்ஸி தன்னை போட்டோ எடுப்பவர்களை கடுமையாக விளாசி கோபத்தை கக்கியுள்ளார். அந்த பேட்டியில் பேசியுள்ள டாப்ஸி, தான் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன் என்றும், சினிமா கேமரா முன்பு மட்டும்தான் தான் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். தனக்கு போட்டோ எடுப்பது கொஞ்சம் கூட பிடிக்காது என்பது ஊடகங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.kaajal Pasupathi: சான்ஸ் கேட்டதும் நண்பனே அந்த மாதிரி பேச ஆரம்பிச்சுட்டான்… பிரபல நடிகை வேதனை!
கொஞ்சமும் பிடிக்காதுவீட்டிலிருந்து தான் வெளியே வரும் போது மற்றவர்கள் தன்னை வளைத்து வளைத்து போட்டோ எடுப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், கார் கண்ணாடி முன்பெல்லாம் கேமராவை வைத்து எதற்காக தன்னை போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க வேண்டும் என்றும் சீறியுள்ளார். இந்த மாதிரி செய்வது எல்லாம் தனக்கு கொஞ்சமும் பிடிக்காது என்று கூறியுள்ள டாப்ஸி, தான் ஒரு நடிகை என்பதற்காக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தடாலடியாக கூறியுள்ளார்.VJ Chithra: விஜே சித்ராவின் உடல் உறுப்புகள் எங்கே? பிரபல நடி பகீர்!
நான் என்ன மிருகமா?மேலும் தன்னுடைய சுதந்திரத்தை பறிக்க யாருக்கும் எந்த அனுமதியும் கிடையாது என்று தெரிவித்துள்ள டாப்ஸி, சினிமாவின் நடிகையாக இருப்பதால் பல மோசமான விஷயங்களை எதிர்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் ஏன் தன்னிடம் இது போன்று நடந்து கொள்கிறீர்கள்? தன்னை ஏன் புகைப்படம் எடுக்கிறீர்கள் என்றும் கேட்டு கோபமடைந்த டாப்ஸி, தான் என்ன மிருகக் காட்சி சாலையில் உள்ள மிருகமா என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.நயன்தாரா இப்படியானதற்கு அதுதான் காரணமா?
Taapsee Pannu

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.