மும்பை,:தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டருடன் தன் மனைவி ஓடிப்போனதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அக்கட்சி தலைவர் சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்தார்.
சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்சரத்பவார் வீட்டை தொலைபேசி வாயிலாகதொடர்பு கொண்ட ஒருவர், அவரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த தொலைபேசி அழைப்பு பீஹாரில் இருந்து வந்ததை கண்டுபிடித்த போலீசார், 46 வயது நபரை பாட்னாவில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் 10 ஆண்டுகளுக்கு முன் மஹாராஷ்டிராவின் புனே நகரில் மனைவியுடன் வசித்து வந்ததாக கூறினார்.
அப்போது, தேசியவாதகாங்., கட்சி தொண்டர்ஒருவருடன் அவரது மனைவிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை பிரிந்த அவரது மனைவி, அந்த நபரை திருமணம் செய்து கொண்டார். இதனால் விரக்தி அடைந்த அந்த நபர், பாட்னாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அது முதல், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் வீட்டுக்கு தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து, கட்சித் தொண்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
இந்த விவகாரத்தில் சரத்பவார் தலையிட மறுத்ததால், ஆத்திரத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
இதன் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement