ஆக்ரா, உ.பி.,யின் ஆக்ரா அருகே உள்ள பெலோத் கிராமத்தில், ஒரு வீட்டின் சமையலறையில் காஸ் சிலிண்டரில் நேற்று முன் தினம் கசிவு ஏற்பட்டது.
இதை அறியாமல், அந்த வீட்டில் இருந்த மூதாட்டி பால் காய்ச்ச அடுப்பை பற்ற வைத்தார். அடுத்த வினாடியே சிலிண்டர் வெடித்து வீடு முழுதும் தீப்பற்றியது. வீட்டில் இருந்த அனைவரும் தப்பித்து வெளியே ஓடினர்.
ஆனால், உள்ளே ஒரு அறையில் ஆறு மாத பெண் குழந்தை தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்தது. இதை மீட்க அந்தக் குழந்தையின் தாத்தாவும், மாமாவும் வீட்டுக்குள் சென்றனர்.
ஆனால், அதற்குள் குழந்தை உடல் கருகி உயிரிழந்து கிடந்தது. உள்ளே சென்ற இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement