சென்னை: சென்னையில் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் 96-வது மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இசை திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெறுகிறது. மார்கழி இசை விழாவை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சங்கீத கலாநிதி விருதுகளையும் வழங்கினார்.
