வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வடகிழக்கு பிராந்தியத்தில் விமானப்படை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கிழக்கு பிராந்திய விமானப்படை சார்பில் நடக்கும் இந்த பயிற்சி வழக்கமானது தான் என இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9 ம் யங்ச்டே பகுதியில், சீன வீரர்கள் நமது பகுதிக்குள் அத்துமீற முயன்றனர். இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக பார்லிமென்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இந்த மோதலின் போது, குச்சிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது. துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லை எனவும், இதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என ராஜ்நாத் கூறியிருந்தார்.
ஆனால், முதலில் எல்லையில் அமைதி நிலவுவதாக கூறிய சீனா, பிறகு எல்லையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சீன வீரர்களை, அத்துமீறி வந்த இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர் எனக்கூறியது. இது தொடர்பாக மோதலை தொடர்ந்து இரு நாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள், எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், கிழக்கு பிராந்திய விமானப்படை சார்பில், வடகிழக்கு எல்லையில் இன்றும், நாளையும் பயிற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விமானப்படை, இது முன்னரே திட்டமிடப்பட்ட வழக்கமான பயிற்சி தான். இதற்கும், டிச.,9 ல் தவாங்கில் நடந்த மோதலுக்கும் எந்தவித தொடர்புமில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகே சீன விமானங்கள் தென்பட்ட நிலையில், இந்திய விமானப்படை அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இச்சூழ்நிலையில், அங்கு விமானப்படை விமானங்கள் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement