மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உடைகுளம் பகுதியை சேர்ந்த வாலிபர் காளை. இவர் சாஸ்தா நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் காளை சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்ற பள்ளி மாணவி ஒருவர் காயமடைந்த இளைஞரை ஓடிச்சென்று காப்பாற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
