பாரிஸ்:பிரான்சில், அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.
ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள லியோன் நகரில், எட்டு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பற்றிய தீ, குடியிருப்பு முழுதும் பரவியது. இதனால், துாக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வீடுகளைவிட்டு வெளியே ஓடி வந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்ததீயணைப்பு வீரர்கள், பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.
காயமடைந்த 14 பேரில், நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீ விபத்துக்கான காரணம்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2019ம் ஆண்டுக்குப் பின், பிரான்சில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்து இதுவாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement