இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்த வழக்கில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்த வழக்கில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பெண் 6 முறை கருமுட்டை தானம் வழங்கலாம் என ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். கருமுட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெற வேண்டும் என கூறப்படும் நிலையில் வங்கிகள் அமைக்கப்படவில்லை என மனுதாரர் தெரிவித்தார். கருமுட்டை வங்கி அமைக்கும் வரை, கருமுட்டையை பெற்று செயற்கை கருத்தரித்தல் நடைமுறையை தொடர அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.