இலங்கையில் விருந்துகளில் நடக்கும் அதிர்ச்சி செயல் – பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை


நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்றை கடத்தல்காரர்களால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நேற்று ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விருந்துகளில் நடக்கும் அதிர்ச்சி செயல் - பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை | Colombo Club Party Dance

இந்த இரகசிய வேலைத்திட்டத்தின் முதல் இலக்கு பாடசாலை மாணவர்கள் என தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விருந்தில் புதிய உணவு பானங்களை பருகி பார்க்குமாறு புதிதாக வருபவர்களிடம் ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான சிறுவர்கள் அல்லது பெரியவர்கள் இதனை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கமைய, வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சிறுவர்களை அழைத்து வரும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.