குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்துக்கு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் (13) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோன்று, புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய உரிய திருத்தங்களை சட்டமூலத்தில் உள்வாங்கியுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இந்தச் சட்டமூலம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து அடுத்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கருத்திற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ ரவுப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.