கொங்கு பகுதிகளில் மீண்டும் களைகட்டும் ஒயிலாட்டம்… உயிர்க்கொடுக்கும் பம்பை இசை!

கோவை, திருப்பூர், ஈரோடே, சேலம் போன்ற கொங்குமண்டல பகுதிகளில் கொரோனா காலகட்டங்களுக்கு பிறகு ஒயிலாட்டம் நிகழ்ச்சி பெரும் அளவில் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் வள்ளி கும்மி போன்ற நாட்டுப்புற கலைகளும் அதிகஅளவு மக்களால் வரவேற்கப்படுகிறது.
ஒயிலாட்டம்
ஒயிலாட்டம் என்ற சொல்லுக்கு அழகு, அலங்காரம் என்று பொருள். ஒயிலாட்டம் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்த ஒரு நாட்டுப்புற நடனமாகும். மதுரையில் ஆடப்படும் தேவராட்டமே ஒயிலாட்டத்தின் முன்னோடி என கருதப்படுகிறது.
image
அந்த வகையில் தற்போது கொங்கு பகுதிகளில் தன நடன அடிகளை வைத்துள்ளது ஒயிலாட்டம். பொதுவாக இந்த ஆட்டத்தை கோவில் திருவிழாக்களில் காணலாம். ஒயிலாட்டம் ஆடுபவர்கள் தங்கள் கால்களில் சலங்கை, கைகளில் வண்ண துணிகள் மற்றும் ஒயிலாட்ட கட்டை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
கொங்கு மண்டலம்

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற இடங்களில் ஒயிலாட்டம் கற்றுக்கொடுக்க பல கலை குழுக்கள் உருவெடுத்துள்ளது. இதில் பங்கெடுக்கும் கலைஞர்கள் 90 நாட்கள் பயிற்சி மேட்கொண்ட பிறகு அரங்கேற்றம் செய்கின்றன. ஒரு ஒரு கிராமங்கிலில் உள்ள கோவில்களில் அவ்வூர் மக்களுக்கு இதுதொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் பிரம்மாண்டமாக அரங்கேற்றம் நிகழ்த்தப்படுகிறது . 
image
பம்பை இசை, நாட்டுப்புற பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், கிராமத்து பாடல்கள், ஒயிலாட்டக்கட்டை ஆகியவற்றின் இசை நடனக்கலைஞர்களை இசைக்கு ஏற்றபோல நடனமிட வைக்கிறது. மைதானத்தில் பம்பை இசைக்கு ஏற்ப அவர்கள் வளைந்து நெளிந்து ஒயிலாட்டம் ஆடும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் அமைகிறது. பம்பை இசை மெதுவாக ஆரம்பித்து இறுதியில் வேகம் எடுக்கும் போது அவர்களின் நடனம் வேகம் எடுக்கிறது.
6-இல் இருந்து 60- வரை
ஒயிலாட்டம் சின்னஞ்சிறார்களை மட்டுமல்ல இளம் காளையர்களையும் கட்டி இழுக்கிறது. இந்த ஒயிலாட்டத்தில் 3 வயது குழந்தை முதல் 60, 70 வயது பெரியவர்கள் வரை ஈடுபாட்டுடன் கலந்துகொள்கின்றனர். சுமார் 3 மணி நேரம் நாடாகும் இந்த ஆட்டத்தில் சிறார்களும் பெரியவர்களும் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.
image
இந்த ஆட்டம் தற்போது உள்ள காலத்திற்க்கேற்ப மாற்றங்களுடுன் ஆடப்படுகிறது. ஓயிலாட்டம் மூன்று கட்டங்களாக பிரித்து ஆடப்படுகிறது. சிப்ஸ், கட்டை, லேஸ்யும் போட்றவற்றுடன் ஆடி இறுதியில் கும்மியுடன் ஆட்டம் நிறைவு செய்யப்படுகிறது. ஆடத்தெரியாதவரை கூட ஆட வைக்கும் அளவிட்டுக்கு பம்பை கருவியின் இசை இருக்கும். இந்த பம்பை இசை ஒயிலாட்டத்திற்கு உயிர் அளிக்கிறது.
image
கொங்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற இந்த ஒயிலாட்டம் நாடி நரம்புகளை இயக்கி, நடனம் ஆடுபவர்களை மட்டுமல்லாமல் காண்பவர்களையும் உற்சாகமூட்டுகிறது.
-அருணா ஆறுச்சாமிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.