வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு பேரூராட்சி பகுதிகளில் விலைவாசி உயர்வு மற்றும் மழை நிவாரணம் வழங்காததை கண்டித்து அதிமுக.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகம் அருகே தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம், சொத்துவரி உயர்வு, பால் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் அதீத கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூர் செயலாளர் போகர் ரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சக்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தரங்கம்பாடி பேரூராட்சியில் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவரும் முன்னாள் எம்எல்ஏ.,வுமான பாரதியும், மணல்மேடு பேரூராட்சியில் முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்லையனும், குத்தாலம் பேரூராட்சியில் பாலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான அதிமுக.,வினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement