யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இன்று (16) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் போதனா வைத்தியசாலையில் வெளியேற்றப்படுகின்ற மருத்துவ கழிவுகள் ( Medical Waste) மற்றும் உயிரியல் கழிவுகளை (Bio Medical Waste) அகற்றுவதற்காக கோம்பயன் மயானத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், மாநகர முதல்வர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர், UNDP பிரதிநிதிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Logini Sakayaraja