சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட “சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்” இன்று (16) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கான பண்புரு மாற்றுத் தீர்வு, அணுகத்தக்க மற்றும் நியாயமான உலகை உருவாக்குவதற்கு சக்தியை வழங்குவதில் புத்தாக்கத்தின் வகிபாகம் எனும் தொனிப்பொருளிற்கு அமைய இந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நடைபெற்றது.
1992 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளிற்கு அமைய டிசம்பர் மாதம் 3ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினம் இடம்பெற்றுவருகிறது .
முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்துடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் ஜெ.சுதாநாதன் தலைமையில் இந்த நிகழ்வு முனெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினராக வட மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் செ.அகல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்ட கல்விப் பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Logini Sakayaraja