Avathar 2: அவதார் 2 படத்தை பார்த்த சிம்பு..என்ன சொல்லியிருக்காருனு நீங்களே பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது டாப் ஹீரோவாக அசத்தி வருகின்றார். பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளை சந்தித்து தற்போது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார் சிம்பு.

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மெகாஹிட் வெற்றிகளை பெற்றன. குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்து நூறு கோடி வசூல் செய்து சிம்புவுக்கு சிறந்த கம்பாக் படமாக அமைந்தது.

Thalapathy vijay: வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இப்படி தான் இருக்கும்..மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்..!

இந்நிலையில் தற்போது சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் தீ தளபதி என்ற பாடலையும் பாடினார் சிம்பு.

சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் நடிகர் சிம்பு. அப்போது அவதார் 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு சமூகத்தளத்தில் அதன் பதிவை போட்டுள்ளார்.

உலகப்புகழ் பெற்ற ஜேம்ஸ் கேமரான் இயக்கத்தில் வெளியாகியுள்ள அவதார் 2 திரைப்படத்தை ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சயமத்தில் நடிகர் சிம்பு தாய்லாந்தில் அவதார் 2 படத்தை பார்த்துவிட்டு கிளாப் செய்யும் எமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.