அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் ஆன்மீக தலைவரும், அகில இந்திய சுபி சஜ்ஜதன்ஷின் கவுன்சில் தலைவருமான ஹஜ்ரத் சையது நசீருதீன் அளித்துள்ள பேட்டி: பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பயன்படுத்திய விஷம தானமான வார்த்தைக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பிலாவல் பூட்டோ தனது அமைச்சர் பதவியை மட்டுமன்றி அவரது தேசத்தை தரம் தாழ்த்தியுள்ளார். பிலாவல் பூட்டோவுக்கு எனது அறிவுரை இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம். எங்களது அரசியல் சாசனம் அனைத்து மதங்களின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்கள். பாகிஸ்தானிய முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் அதிக பாதுகாப்புடன், நல்ல நிலைமையில் உள்ளனர் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
