டெல்லி: ஜல்லிக்கட்டிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. காலம் காலமாக விவசாயத்தையும், விவசாயத்தோடு ஒன்றிப்போனது ஜல்லிக்கட்டு என்று தமிழ்நாடு அரசு வாதித்திட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது காளைகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு வாதம் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டு பொழுது போக்கிற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்று என்றும் காளைகளை பெருமைப்படுத்தவும் கவிரவிக்கவும் ஜல்லிக்கட்டு உள்ளது. தமிழக கலாசாரம், பாரம்பரியம், நாட்டு காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
ஜல்லிக்கட்டின் போது எந்த விதிமீறலும் இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதிசெய்யும் விதமாக அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்படுகின்றது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்துள்ளது.