சரண், டி
பீஹாரில், கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானோர் பலியானதாகக் கூறப்படும் நிலையில், சிறப்பு விசாரணைக் குழு நடத்திய அதிரடி வேட்டையில், ௧௨9 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சரண் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் ஏராளமானோர் பலியானதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை ௩௦ ஆக உயர்ந்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்டம் முழுதும் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், கள்ளச் சாராய வியாபாரிகள் ௧௨9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ௪,000 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கள்ளச் சாராயம் குடித்து பலியான வர்களின் உண்மையான எண்ணிக்கையை, அரசு மறைக்கப் பார்க்கிறது. இதில், ௫௦ பேர் உயிர்இழந்துள்ளனர் என, எதிர்க் கட்சியான பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம், பீஹார் அரசுக்கும், காவல் துறைக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. இதில், நான்கு வாரங்களுக்குள் இச்சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
