பாராளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
2022.10.05 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த குழுக்களினால் நடாத்தப்படும் ஒவ்வொரு விசாரணை தொடர்பிலும் குழுக்களிற்கு உதவியளிப்பதற்காக குழுவொன்றின் தவிசாளருக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு முடியும் என்பதால், ஒவ்வொரு குழுவுக்கும் இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரிகள் இந்தக் குழுக்களின் விடயங்கள் பற்றிய போதிய அறிவு/ தொழில்சார் அனுபவம்/ தேர்ச்சிகளை பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இது தொடர்பான அனைத்து விபரங்களுடனும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விளம்பரங்களில் வழங்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கல்விசார்/ தொழில்சார் தகைமைகள் மற்றும் அனுபவங்கள் பற்றிய சான்றிதழ்களின் பிரதிகளுடன் 2023 சனவரி மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கத்தக்கவாறு “பாராளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.
இலங்கைப் பாராளுமன்றம் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு உதவியளிப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளை தெரிவுசெய்தல்
பாராளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி, பதினேழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை தாபிப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.
(1) மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(2) நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(3) தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(4) தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(5) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(6) பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(7) பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(8) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(9) உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(10) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(11) கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(12) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(13) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(14) சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(15) சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(16) ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
(17) வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
2022.10.05 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த குழுக்களினால் நடாத்தப்படும் ஒவ்வொரு விசாரணை தொடர்பிலும் குழுக்களிற்கு உதவியளிப்பதற்காக குழுவொன்றின் தவிசாளருக்கு தலா ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைக்கமுடியும் என்பதுடன், பின்வரும் தகைமைகள் மற்றும் அனுபவங்களை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:-
இங்கு தரப்பட்டுள்ள பின்வரும் மாதிரிப் படிவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கல்விசார்/ தொழில்சார் தகைமைகள் மற்றும் அனுபவங்கள் பற்றிய சான்றிதழ்களின் பிரதிகளுடன் 2023 சனவரி மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கத்தக்கவாறு “பாராளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். கடித உரையின் இடதுபக்க மேல் மூலையில் “துறைசார் மேற்பார்வை குழுக்களிற்கான இளைஞர் பிரதிநிதிகளை தெரிவுசெய்தல்” என குறிப்பிடப்படுதல் வேண்டும். (இந்த தகவலை www.parliament.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.)
- வயதெல்லை
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- கல்விசார் தகைமைகளும் அனுபவங்களும்
பின்வரும் (அ) மற்றும் (ஆ) பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்ட கல்விசார் தகைமைகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் இளைஞர் பிரதிநிதிகளாக துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு தெரிவுசெய்யப்படுவதற்காக விண்ணப்பிக்கலாம்:-
(அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழமொன்றிலிருந்து பட்டமொன்றினை பெற்றிருத்தல்; அல்லது
(ஆ) க.பொ.த.(உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்
விண்ணப்பதாரிகள் மேற்குறிப்பிடப்பட்ட குழுக்களின் விடயங்கள் பற்றிய போதிய அறிவு/ தொழில்சார் அனுபவம்/ தேர்ச்சிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
- தெரிவுசெய்யும் முறைமை
விண்ணப்பதாரிகளினால் அனுப்பப்படும் விண்ணப்பங்களில் உள்ள தகைமைகள் மற்றும் விடயங்கள் குறித்து காட்டுகின்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குழுவினதும் நடவடிக்கைகளுக்காக அந்தந்த சந்தர்ப்பங்களில் சேவையாற்றுவதற்காக பொருத்தமான இளைஞர் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.
- விண்ணப்பதாரிகளினால் பின்வரும் சான்றிதழ்களின் பிரதிகள் (மூலப்பிரதிகள் அல்ல) தமது விண்ணப்பங்களுடன் இணைக்கப்படுதல் வேண்டுமென்பதோடு, மூலப்பிரதிகள் கோரப்படும் பட்சத்தில் அவை சமர்ப்பிக்கப்படுதலும் வேண்டும்:-
(அ) பிறப்புச் சான்றிதழ்
(ஆ) தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று
(இ) கல்வி தகைமைகளை உறுதிப்படுத்துகின்ற சான்றிதழ்கள்
(ஈ) தொழில்சார் தகைமைகளை உறுதிப்படுத்துகின்ற சான்றிதழ்கள்
(உ) அனுபவங்களை உறுதிப்படுத்துகின்ற சான்றிதழ்கள்
- விண்ணப்பத்திலுள்ள ஏதேனும் தகவல்கள் பிழையானதாக கண்டறியப்படும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பதாரி தகைமையற்றவராக கருதப்படுவதற்கு அது காரணமாக அமையும்.
6. மேலே குறிப்பிடப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகள் இன்றி அனுப்பப்படும் விண்ணப்பங்களும் மாதிரிப் படிவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
பாராளுமன்றச் செயலாளர் நாயகம்
இலங்கைப் பாராளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே,
2022 திசெம்பர் 18 ஆந் திகதி
இலங்கைப் பாராளுமன்றம் மாதிரிப் விண்ணப்பப் படிவம் ……………………………….. பதவி
01. (அ) முதலெழுத்துகளுடன் பெயர் (தமிழில்) : ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
(ஆ) முதலெழுத்துகளினால் குறிப்பிடப்படும் பெயர்கள் (தமிழில்): ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
(இ) முழுப் பெயர் (ஆங்கில கெப்பிடல் எழுத்துகளில்): (Mr./Mrs. /Miss) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
02. தேசிய அடையாள அட்டை இலக்கம் :
03. (அ) தனிப்பட்ட முகவரி: ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
தொலைபேசி இலக்கம் :
(ஆ) அலுவலக முகவரி: ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
தொலைபேசி இலக்கம் :
(இ) உத்தியோகபூர்வ கடித பரிமாற்றத்திற்காக விரும்பப்படும் முகவரியை குறிப்பிடவும்.
தனிப்பட்ட அலுவலக
04. (அ) பிறந்த திகதி : வருடம்:……………….மாதம்:……………….திகதி:………………..
(பிறப்புச் சாண்றுதலின் பிரதி இணைக்கப்படுதல் வேண்டும்)
(ஆ) விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாளன்று வயது :-
வருடங்கள்: ……………………….. மாதங்கள்:…………………. நாட்கள்:………………………
05. விவாகமானவரா /விவாகமாகாதவரா என்பது : (விவாகமானவர்/ விவாகமாகாதவர்)
06. பால்நிலை : (ஆண் / பெண்)
07 இலங்கைப் பிரசையா எனக் குறிப்பிடுக : (ஆம் / இல்லை)
08 . கல்வி மற்றும் உயர் கல்வித் தகைமைகள்: (சான்றிதழ்களின் பிரதிகள் இணைக்கப்படுதல் வேண்டும்) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
09. தொழில்சார் தகைமைகள்: (சான்றிதழ்களின் பிரதிகள் இணைக்கப்படுதல் வேண்டும்)
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
10 . ஏனைய தகைமைகள்: (சான்றிதழ்களின் பிரதிகள் இணைக்கப்படுதல் வேண்டும்)
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
11. அனுபவம் (சான்றிதழ்களின் பிரதிகள் இணைக்கப்படுதல் வேண்டும்)
நிறுவனம் |
பதவி |
சேவைக் காலம் |
12. தற்போதைய தொழில் குறித்த விபரங்கள்
(அ) நிறுவனத்தின் பெயரும் முகவரியும்:………………………………………………………………………….
(ஆ) தற்போது வகிக்கும் பதவி: ……………………………………………………………………………………….
(இ) முதல் நியமனத் திகதி :…………………………………………………………………………………………….
(ஈ) மாதாந்த அடிப்படைச் சம்பளம் :…………………………………………………………………………………
(உ) கொடுப்பனவுகள் :…………………………………………………………………………………………………
(ஊ) மொத்த சம்பளம்:……………………………………………………………………………………………………
13. நீங்கள் ஏதாவது குற்றச்செயல் நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டவாரா ? (ஆம் /இல்லை)
ஆமெனில், விபரங்களைக் குறிப்பிடவும்:
…………………………………………………………………………………………………….
14. நீங்கள் அரசாங்கத்தின் கீழ் சேவை புரிந்துள்ளீர்களா ? (ஆம் / இல்லை)
ஆமெனில், விபரங்களைக் குறிப்பிடவும்:
…………………………………………………………………………………………………………………………………..
என்னால் இந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மையானவை எனவும் சரியானவை எனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். இங்கு தரப்பட்ட ஏதாவது தகவல் பொய்யானது அல்லது தவறானது என நான் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் கண்டறியப்பட்டால், அவை குழுவில் சேவையாற்றுவதற்கு நான் தகைமையற்றவர் எனவும் அல்லது தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் கண்டறியப்பட்டால், அவை குழுக்களில் சேவையாற்றுவதற்கு அழைக்கப்படாமல் இருப்பதற்கான காரணமாக அமையும் என்பதையும் நான் அறிவேன்.
திகதி :-……………………………..
………………………………………
விண்ணப்பதாரியின் கையொப்பம்