புதுடில்லி,:போதைப் பொருள் தொடர்பான பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகார் குறித்து சிறப்பு குழு விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் பெயர் இடம்பெற்றது; அவரிடமும் விசாரணை நடந்தது.
இந்நிலையில், போதைப் பொருள் வழக்கு தொடர்பான பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், ரகுல் ப்ரீத் சிங்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மேலும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை சேர்ந்த எம்.எல்.ஏ., ரோஹித் ரெட்டிக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
கர்நாடகாவின் பெங்களூருவில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், சினிமா பிரமுகர் ஒருவர் அளித்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விருந்தில், ரோஹித் ரெட்டி பங்கேற்றார். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement