புதுடில்லி:அண்மையில் நடந்து முடிந்த ஜாய் டவுன்’ திருவிழாவில், எக்ஸ்.எம்., மற்றும் எம். 340 ஐ., எனும் இரு சூப்பர் கார்களையும், எஸ் 1000 ஆர்.ஆர்., எனும் சூப்பர் பைக்கையும் பி.எம்.டபுள்யு., நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இவற்றை இந்நிறுவனத்தின் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் பசிபிக் மண்டலத் தலைவர் மார்கஸ் முல்லர் மற்றும் பி.எம்.டபுள்யு., குழுமத்தின் இந்திய தலைவர் விக்ரம் பாவா ஆகியோர் கோலாகலமாக அறிமுகம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து, விக்ரம் பாவா கூறியதாவது:
எஸ் 1000 ஆர்.ஆர்., சூப்பர் பைக், பி.எம்.டபுள்யு., மோட்டோராட் ரேஸிங் டி.என்.ஏ.,வை குறிக்கிறது. ரேஸ் டிராக்கோ, சாலையோ, இந்த பைக் முதலில் மட்டுமே வரும்.
பி.எம்.டபுள்யு., ‘எம் சீரிஸ்’ கார்களின் ரசிகர்கள், எக்ஸ்.எம்., மற்றும் எம். 340 ஐ., கார்களின் பவரை உணர்ந்து, ரசிக்கத் தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement