”No.1 ஸ்டார் யாருனு எங்களுக்கு தெரியாதா?” -தில் ராஜுவால் திருப்பூர் சுப்பிரமணியம் காட்டம்!

அஜித், விஜய் படங்கள் தனித் தனியாக வெளியானாலே எக்கச்சக்கமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்க்கப்படும். ஆனால் 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கும் நிலையில் அந்த படங்களுக்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்பதை ரசிகர்களின் ஆவலான பதிவுகள் மூலமே அறிந்துகொள்ள முடியும்.

இப்படி இருக்கையில், விஜய்யின் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, “தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 ஹீரோ. அவரது வாரிசு படத்துக்குதான் அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டு துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்டின் உதயநிதி ஸ்டாலினை சந்திக்கப் போகிறேன்.” என பேசியிருப்பதுதான் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

Thalapathy Vijay REACTS to Varisu vs Thunivu clash; 'Let both the films do  well' | PINKVILLA

தில் ராஜூவின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. அந்த வகையில் தமிழக தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் பிரபல திரைப்பட விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பரமணியம் கடும் காட்டமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதன்படி திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது, “ஐதராபாத்தில் இருந்துக்கொண்டு எந்த அர்த்தத்தில் தில் ராஜூ இப்படி பேசுகிறார் என புரியவில்லை. துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டாலும் இன்னும் ஒரு தியேட்டர் கூட கன்ஃபார்ம் செய்யவில்லை. ஒருவேளை உதயநிதி துணிவு படத்துக்கு என தியேட்டரை பிளாக் செய்து வைத்திருந்தால் சொல்வதில் நியாயம் இருக்கிறது. எதோ யூகத்தில்தான் தில் ராஜூ இப்படி பேசியிருக்கிறார்.

நானே உதயநிதி கிட்டே பேசுறேன்.. வாரிசுக்குத்தான் அதிக தியேட்டர் வேணும்..  தில் ராஜு திடீர் முடிவு! | Dil Raju ready to talk with Udhayanidhi Stalin  for getting more numbe of ...

ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் அஜித் விஜய் என பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டார்கள். ரெட் ஜெயன்ட் புக்கிங் கொடுத்த பிறகே முடிவெடுப்பார்கள். அதற்குள் எங்க படத்துக்குதான் அதிக தியேட்டர் வேண்டும் என கேட்டால் கொடுத்துவிடுவார்களா? விஜய்தான் நம்பர் 1 ஸ்டார் என கூறியிருக்கிறார் தில் ராஜு. ஆனால் இங்கு நம்பர் 1 ஸ்டாரா இருப்பது கதைதான்.

படம் நல்லா இருந்தால் எந்த நடிகரின் படமும் ஓடும். அடுத்தடுத்து விஜய், அஜித், கமல் படங்களெல்லாம் வந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் வசூலை வாரிக் குவித்தது. நான்கு ஆண்டுகளுகு பிறகு கமல் நடிப்பில் வந்த விக்ரம் செம்ம ஹிட் அடித்தது. அப்போ பொன்னியின் செல்வனில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திதான் நம்பர் 1 ஸ்டார் அல்லது விஜய் அஜித்த விட விக்ரம் படம் ஹிட் கொடுத்த கமலை நம்பர் 1 ஸ்டார்னு சொல்லிவிட முடியுமா?

ALSO READ: 

”வாரிசு தமிழ் படமில்லையா? வம்சி சொன்னது பொய்யா?” – உண்மையை போட்டுடைத்த தில் ராஜு!

கதை நல்லா இருக்குனு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை எடுத்தது தெலுங்கு தயாரிப்பாளர்தான். ஆனால் தமிழ்நாட்டு தியேட்டர்ல அவ்வளவா போகல. அதுக்காக சிவகார்த்திகேயன் சுமாரான ஸ்டார்னு சொல்ல முடியுமா என்ன?
நடிகர்களின் முகத்துக்காக மட்டுமே மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவதில்லை. எங்களுக்கு தெரியாதா யார் பெரிய ஸ்டார்னு? எந்த கதை நல்லா இருக்கோ அதுதான் பெரிய ஸ்டார்.

தான் தயாரித்த படத்தின் ஹீரோதான் பெரிய சூப்பர் என அவரே சொல்வது நியாயமே இல்லை. விஜய்ய வைத்து படம் எடுத்துவிட்டோம் என தேவையில்லாமல் பேசி பிரச்னை செய்ய வேண்டாம். இதுலாம் வேண்டாத பேச்சு. அநாவசியமாக தில் ராஜூ வம்பிழுக்கிறார்.” இவ்வாறு பேசியிருக்கிறார்.

ALSO READ: 

‘தமிழ்நாட்டில் அஜித்தை விட, விஜய் தான் நம்பர் 1’ – தில் ராஜூவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.