உருக்கமான கடிதம் சிக்கியது பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் மாதேஷ்(57). பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி கலைவாணி (42). இவர்களது மகன் பரத் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு பரத் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டார். நேற்று பரத் எழுந்து பார்த்தபோது பெற்றோர் இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு கதறினார்.  இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்ததில் இருவரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்தது தெரியவந்தது.

அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க முடியவில்லை. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் கலைவாணிக்கு, மருத்துவம் பார்க்க முடியவில்லை. எனவே,   தற்கொலை செய்கிறோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என எழுதப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.