ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதியர் கைது

ரூ.2 கோடி வரை ஏலச்சீட்டு மோசடியில் ஈடுபட்டு 7 ஆன்டுக்கு பிறகு பெங்களூரில் சிக்கிய பட்டாபிராம் தம்பதியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர்கள் ரூபி என்ற முருகன் – நிர்மலா தம்பதியர். இவர்கள் இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில், பட்டாபிராம் பஜார் 3-வது குறுக்கு தெருவில் வசித்துவரும் முருகையன் (68) என்பவர் அந்த தம்பதியிடம், தனது பெயரில் 5 லட்சம் ரூபாய் சீட்டும் தனது மகன் பெயரில் ஒரு சீட்டு என இரண்டு சீட்டுக்கும் 10 லட்சம் ரூபாயை முருகையன் கட்டியுள்ளார்.
image
இந்த சீட்டு கடந்த 10.12.2015 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், இதுவரையில் முருகையனுக்கு சீட்டு பணத்தை தராமல் இருந்துள்ளனர். அதேபோன்று தங்கள் பகுதியில் உள்ள மொத்தம் 20 நபர்கள் அந்த சீட்டில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து தாங்கள் கட்டிய சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவடி காவல் ஆணையரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 7 வருடங்களாக தலைமறைவாக இருந்த முருகன் மற்றும் அவரது மனைவி நிர்மலாவை பெங்களூர் ஜீவன் பீமா நகரில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்த ஆவடி மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் பாலன் உள்ளிட்ட போலீசார் அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
image
இதைத் தொடர்ந்து காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி பின்னர், பொது மக்களிடம் ஏமாற்றப்பட்ட பணம் என்ன ஆனது என தெரியவரும் என தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.