நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக இருப்பவர் ராஜ்குமார். களியக்காவிளையில் இவர் பணியாற்றிய போது, முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வருவதை மறைத்து 2வது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் எஸ்ஐயின் 2வது மனைவி ஆஷா, நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமாரிடம் அளித்த புகரில், எஸ்ஐ ராஜ்குமார் முதல் மனைவி இருப்பதை மறைத்து, என்னை 2வதாக திருமணம் செய்து கொண்டார். என்னுடைய நகைளை அடமானம் வைத்துள்ளார். அதனை திருப்பித் தருமாறு கேட்டும் தர மறுக்கிறார்என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், டிஐஜி பிரவேஷ்குமாரிடம் அளித்தார். இதையடுத்து எஸ்ஐ ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.