வைத்தியர்கள் அவசியம் ஓய்வு பெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைத்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வைத்தியர்கள் அவசியம் ஓய்வு பெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது விசேட வைத்தியர்கள் அரச வைத்தியர்கள், பல் சிகிச்சை வைத்தியர்கள் மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய பதவிகளுக்காகும்.
இதில் ஓய்வூதிய வயதெல்லை 5 பிரிவுகளின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தற்பொழுது 63 வயதை பூர்த்தி செய்ய வைத்தியர்கள் 2022.12.31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெறவேண்டும்.
தற்பொழுது 62 வயதை பூர்த்தி செய்துள்ள வைத்தியர்கள் தமது வயது 63 பூர்த்தியாகும் பொழுது ஓய்வு பெற வேண்டும்.
3 ஆவது பிரிவின் கீழ் இதுவரையில் 61 வயதை பூர்த்தி செய்துள்ள வைத்தியர்கள் 62 வயதை பூர்த்தி செய்யும் பொழுது ஓய்வு பெற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 60 வயதை பூர்த்தி செய்துள்ள வைத்தியர்கள் தமது வயது 61 பூர்த்தியாகும் பொழுது ஓய்வு பெற வேண்டும்.
இதேபோன்று இதுவரையில் 59 வயதை பூர்த்தி செய்துள்ள வைத்தியர்கள் தமது வயது 60 பூர்த்தியாகும் பொழுது ஓய்வு பெற வேண்டும் என்று புதிய மறுசீரமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிறந்த தினத்தை எதிர்கொள்ளும் வைத்தியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆண்டில் ஜூன் மாதம் 31 திகதி வரை பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கி ஓய்வு பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த மறுசீரமைப்பு அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய வர்த்தமானி: