பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் கொலரா நோய் பரவல் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதேவேளை உலகம் முழுவதும் கொலரா நோய்க்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கொலரா நோய்க்காக வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகளின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளமை இதற்கான மற்றொரு காரணமாகும். இதுவரை உலகின் 30 நாடுகளில் கொலரா தொற்றுநோய் பதிவாகியுள்ளது. இது வழமையான நிலையை விட மூன்று மடங்கு அதிகமாகும் எனவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலக நாடுகளில் கொலரா நோய் இதற்கு முந்தின கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்தவருடம் (2022-ஆம் ஆண்டில்) கொலரா , 30 நாடுகளில் பரவியுள்ளது
“நடப்பு சூழ்நிலையானது முற்றிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேறுபட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் நாம் பார்க்காத வகையில், கொலரா பரவல் அதிகம் மட்டுமின்றி, அதிக கொடியதும் ஆகும். தொற்று மற்றும் மரண விகிதங்கள் பல ஆண்டுகளாக பெருமளவில் குறைந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் கொலரா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொலரா பரவுவதற்கு, அனைத்து வகையான காரணிகளும் அதன் பங்கிற்கு ஏற்ப பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளன” என்று உலக சுகாதார அமைப்பின் கொலரா மற்றும் தொற்றியல் நோய் தொடர்பான குழு தலைவர் பிலிப் பார்போசா ஜெனீவா நகரில் நகரில் சுட்டிக்காட்டினார்.
வாந்திபேதி அல்லது கொலரா நோய் என்பது, விபிரியோ கொலரா (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் சிறுகுடலில் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் . இப் பக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந் நோய் மனிதருக்குத் தொற்றுகிறது.
இது அதிகப்படியான நீரிழப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை கூட ஏற்படுத்தும். 1800 களில் அமெரிக்காவில் கொலரா ஒரு தீவிர நோயாகக் கருதப்பட்டது.
கொலரா என்பது சிறுகுடலில் ஏற்படும் ஒரு கடுமையான தொற்று. இது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாந்தி ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
விப்ரியோ கொலரா என்ற பாக்டீரியாவால் காலரா நோய் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் மலத்தில், மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் தண்ணீரில் இது காணப்படுகிறது.
தெருவோர வியாபாரிகளால் விற்கப்படும் உணவுப் பொருட்கள்.
மனித மலம் கலந்த அசுத்தமான தண்ணீரில் விளையும் காய்கறிகளை உட்கொள்வது.
மனித மலம் அல்லது அசுத்தமான தண்ணீரால் அசுத்தமான மீன் மற்றும் கடல் உணவுகளை உட்கொள்வது.
மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சரியாகக் கழுவாதபோது, கொலரா பரவக்கூடும்.