கடலூர் மாவட்டத்தில் 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு வாலிபர்களை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் ஊமங்கலம் போலீசார் பொன்னாரி அகரம் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காரில் சோதனை செய்ததில், பல மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சங்கர் ராம் (34) மற்றும் லக்குமாராம்(27) என்பதும், இவர்கள் ராஜஸ்தானில் இருந்து சுமார் 350 கிலோ எடை கொண்ட 16 மூட்டைகள் ஆன்ஸ், 12 மூட்டைகள் பான் மசாலா மற்றும் பலரிடம் மூட்டைகள் புகையிலை பொருட்கள் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், மேலும் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.