ஏஹெடுவெவ என்ற இடத்தில் இடம்பெற்ற பரீட்சை சம்பவம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் விரைவு

ஏஹெடுவெவ என்ற இடத்தில் நேற்று (19) நடைபெற்ற தரம் 5  புலமைப்பரிசில்  பரீட்சையின் போது பாடசாலை மாணவர்கள் சிலர் எதிர்கொண்ட சிரமங்களை கண்டறிவதற்காக அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளனர்.

இந்த அதிகாரிகள் குழு இன்று (19) அங்கு அனுப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டு.L.M.D. தர்மசேன தெரிவித்தார்.

இதேவேளை புலமைப் பரீட்சை பெறுபேறுகளை ஒன்றரை மாதம் அல்லது 2 மாதங்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை அல்லது நாளை மறுதினம் விடை தாள்களை மதிப்பிடும் பணி ஆரம்பிக்கப்படும். கூட்டத்தை நடத்தி குறுகிய காலப்பகுதிக்குள் இதன் பெறுபேறுகளை வெளியிட எதிர் பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயர்தர பரீட்சையை ஜனவரி மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோன்று மே மாதத்தில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.