கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக பயனர்களின் டிராபிக் அதிகமாக இருந்ததாகவும், அனைத்தும் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை தொடர்பானது என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
வென்று காட்டிய அர்ஜென்டினா
கத்தாரின் லுசைல் மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.
போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல், இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க, கோப்பையை வெல்வதில் இரு அணிகளும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
Gritemos #TodosJuntos…
🇦🇷🔥🏆¡¡¡SOMOS CAMPEONES DEL MUNDO!!!🏆🔥🇦🇷 pic.twitter.com/KoYnhTmeQC
— Selección Argentina 🇦🇷 (@Argentina) December 18, 2022
வெற்றியாளரை தீர்மானிக்க போட்டியில் கூடுதல் நேரம் ஒதுக்கியும் இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு கோப்பைக்காக போராட, இறுதியில் போட்டி 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதையடுத்து பெனால்டி கிக் முறையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில், அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.
வரலாறு காணாத டிராபிக்
கத்தார் கால்பந்து உலக கோப்பையில் அர்ஜெண்டினாவின் அணியின் வெற்றியை அந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ள அர்ஜென்டினா அணியின் ரசிகர்களும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
Search recorded its highest ever traffic in 25 years during the final of #FIFAWorldCup , it was like the entire world was searching about one thing!
— Sundar Pichai (@sundarpichai) December 19, 2022
இந்நிலையில் கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டு கால வரலாற்றில் எந்த நாளும் இல்லாத பயனர்களின் டிராபிக் நேற்று இரவு இருந்ததாகவும், அதில் அனைவரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பற்றி தான் தேடியுள்ளனர் என்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சொல்லப்போனால் இந்த உலகமே ஒரு குறிப்பிட்ட செய்தியை தேடுவது போல் இருந்தது என்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.