நசீர் அகமட்டை முதலமைச்சராக்கிய பிள்ளையானின் நகர்வுகள் அம்பலம்



தான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் அல்ல என அமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் எப்படி வந்தேன் என்பதை சொல்லியாக வேண்டும்.

நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் அல்ல.

இன்று கல்வி அமைச்சராக இருக்கின்ற சுசில் பிரேமஜயந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த போது அவர் அவருடைய அலுவலகத்திற்கு அவருடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இருந்தார்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்த போது 13 பேர் வந்திருந்தனர்.

பிள்ளையான் உட்பட அந்த கட்சியிலே இருந்த 13 பேரும் நசீர் அகமட்டின் பெயரை சொல்லி உத்தரவாத கடிதம் வழங்கிய வரலாறு தான் வரலாறு. இதனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வேறு தெரிவு இல்லாமல் போனது என சுட்டிக்காட்டியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.