ஆறு பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை ,பாவனையாளர்களிடம் இருந்து நீர் கட்டணத்திற்காக நிலுவையாக அறவிடப்பட வேண்டியுள்ளதாக தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
சபையின் உதவி பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில், 8 இலட்சம் நீர் பாவனையாளர்கள் கடந்த 3 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலப்பகுதிக்கான நீர் கட்டணத்தை செலுத்த தவறியிருப்பதாக தெரிவித்தார்.
நீர் கட்டணத்தை செலுத்த வேண்டிய பாவனையாளர்களுக்கு இதுதொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
60 நாட்களுக்கு மேலாக நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பாவனையாளர்களுக்கு இதுதொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
கட்டணத்தை உரிய வகையில் நிலுவை தொகையை செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகம் ஜனவரி மாதத்தில் துண்டிக்கப்படும் என்றும் உதவி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.