கோலாலம்பூர் : மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள சிலாங்கூர் மாகாணத்தில் உள்ள படாங்கலி என்ற பகுதி சுற்றுலாத் தலமாக உள்ளது.
இது மலையை ஒட்டிய பகுதி என்பதாலும் இயற்கை விவசாய பண்ணை உள்ளதாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணியரின் பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது.
இங்குள்ள இயற்கையை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணியர் கூடாரங்கள் அமைத்து இப்பகுதியில் தங்குவது வழக்கம். இந்நிலையில் நவ.23ம் தேதி நள்ளிரவில் இங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கூடாரங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அவற்றில் தங்கியிருந்தவர்களும் மண்ணில் புதைந்தனர்.
மீட்பு படையினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் நேற்று முன்தினம் வரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் எட்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
மாயமான 10 பேரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement