பாட்னா: பீஹாரில் சரண் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீட வழங்கவில்லை? என பா.ஜ., எம்.பி சுஷில் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீஹாரில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக முதல்வர் நிதிஷ் குமார் உள்ளார். இம்மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் கள்ளச்சாரய விற்பனை அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் சரண் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து 30 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

இது குறித்து முதல்வர் நிதிஷ் கூறுகையில், விஷ சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்காது என அதிரடியாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜ., எம்.பி சுஷில் மோடி சரண் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறுகையில், பிஹார் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
‛‛ இழப்பீடு வழங்கணும்”:
கடந்த 2018 ம் ஆண்டு பிஹாரில் கோக பால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 19 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் கண் பார்வை இழந்தனர். இந்த வழக்கில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த பிரச்சினையில் மக்களுக்காக பாஜ., எந்த எல்லைக்கும் செல்லும். இதேபோல் பீஹாரில் சரண் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீடு வழங்கவில்லை?.
சட்டப்படி:
பீஹாரின் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம் பிரிவு 42-ன் படி, கள்ளச்சாராயம் குடித்து இறப்பு ஏற்பட்டால் 4 லட்ச ரூபாயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 2 லட்ச ரூபாயும், காயம் ஏற்பட்டால் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை சாராய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து மாவட்ட நிர்வாகம் வசூலிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement