முக்கியமான அமைச்சர் ஒருவரின் பதவியை பறிப்பதற்கு தயாராகும் ஜனாதிபதி


அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்கு கிடைக்கும் பணத்திற்கு அமைய ஒப்பந்தங்களை வழங்கும் அமைச்சர்

முக்கியமான அமைச்சர் ஒருவரின் பதவியை பறிப்பதற்கு தயாராகும் ஜனாதிபதி | Minister S Corruption Reached The President S Ear

அரசாங்கத்தில் உள்ள இந்த அமைச்சர் தமக்கு வழங்கப்படும் பணத்திற்கு அமைய ஒப்பந்தங்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை நபருக்கோ, நிறுவனத்திற்கோ வழங்குவதா இல்லையா என்பதை தனக்கு கிடைக்கும் பணத்திற்கு அமைய இந்த அமைச்சர் தீர்மானிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்ரமசிங்க-Ranil Wickremesinghe

குறித்த அமைச்சர் மேற்கொண்டு வரும் இந்த ஊழல் தொடர்பான விடயம் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை கோரும் போது துறையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரின் கையெழுத்துடன்  ஒப்பந்தம்  அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.