முடிந்தது பிரமாண்ட உலகக்கோப்பை; கத்தார் புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி


கத்தாரில் FIFA-வின் 2022 உலகக் கோப்பை முடிந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்றோடு முடிவுக்கு வந்தது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள்

ஆனால், இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை கத்தார் அரசு தன்னுடையை சொந்த பலத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தவில்லை. மைதானத்தை கட்டுவது தொடங்கி உலகக் கோப்பை தொடரின் பெரும்பாலான வேலைகளில் கத்தார் அரசு புலம்பெயர் தொழிலாளர்களை வைத்தே சாத்தியப்படுத்தியுள்ளது.

முடிந்தது பிரமாண்ட உலகக்கோப்பை; கத்தார் புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி | Qatar Migrant Workers Future Fifa World Cup EndsEuropean Pressphoto Agency

இதில், இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 29 லட்சம் வெளிநாட்டு வேலையாட்களின் பங்களிப்பும் உழைப்பும் சேர்ந்தே இந்த உலகக் கோப்பையை கத்தார் இத்தனை பிரம்மாண்டத்துடன் நடத்தி காட்டியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்

நடந்து முடிந்த பிரம்மாண்ட உலகக் கோப்பைக்கான பணியில் ஈடுபட்டு சுமார் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான தொழிலாளர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

எதிர்காலம்?

இந்த நிலையில், உலகக் கோப்பை முடிந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கடுமையாக உழைத்து இந்த உலகக் கோப்பையை சாத்தியமாக்கிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கத்தார் அரசுக்கு சர்வதேச நாடுகளும் சமூகங்களும் தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

முடிந்தது பிரமாண்ட உலகக்கோப்பை; கத்தார் புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி | Qatar Migrant Workers Future Fifa World Cup EndsGetty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.