வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிலிப்பிட் : தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில், உத்தர பிரதேச அமைச்சர் சஞ்சய் சிங் கங்வாருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பிலிப்பிட் தொகுதியில் சஞ்சய் சிங் போட்டியிட்டார்.
அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு பின் சஞ்சய் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது யோகி அமைச்சரவையில் இணை அமைச்சராக உள்ளார்.
![]() |
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வழக்குகளில், நடத்தை விதிகளை மீறியதற்காக மூன்று மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
பின், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement