அயர்லாந்து பிரதமராக லியோ வரத்கர் மீண்டும் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து!

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அயர்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர். 38 வயதில் பிரதமர் ஆனது மூலம் அயர்லாந்தின் இளம் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான பைன் கேல் கட்சி பியனா பெயில் மற்றும் பசுமை கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதில் லியோ வரத்கர் துணைப் பிரதமராகவும், தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.

முன்னதாக கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் பிரதமராகவும், அதன் பிறகு அரசின் எஞ்சிய பதவிக்காலம் முழுவதும் லியோ வரத்கர் பிரதமராக இருப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி லியோ வரத்கரை புதிய பிரதமராக தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தது. இதில் 87 உறுப்பினர்கள் லியோ வரத்கர் பிரதமராவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 62 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் லியோ வரத்கர் மீண்டும் அயர்லாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: பிரான்சில் வெடித்த கலவரம்!

அயர்லாந்து பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா – அயர்லாந்திற்கு இடையேயான வரலாற்று உறவுகள், பகிரப்பட்ட அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா தனது பங்களிப்பை அளிக்க உறுதி அளிப்பதாகவும், நமது துடிப்பான பொருளாதாரங்களின் முழுத் திறனையும் உணர்ந்து செயல்பட ஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியுள்ளார்.

அயர்லாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 47 வயதாகும் லியோ வரத்கர் அயர்லாந்தின் இளம் மற்றும் ஓரினச்சேர்க்கை பிரதமர். இந்தியாவைச் சேர்ந்த அவரது தந்தை அசோக் வரத்கர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.