`இதலாம் இந்தியாலதான் சாத்தியம்…’ மெஸ்சி, எம்பாப்வே ஜெர்சியுடன் திருமணம் செய்த இணையர்கள்!

கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி அர்ஜென்டினா, பிரான்ஸ் அணி வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

கிரிக்கெட் விளையாட்டு மீது மோகம் நிறைந்த இந்தியாவில் கால்பந்து ஜுரம் கடந்த ஒரு மாதமாக பரவி இருந்தது. குறிப்பாக தீவிர கால்பந்து ரசிகர்கள் அதிகளவில் உள்ள கேரளாவில், அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமையன்று பல சுவராஸ்யமான காட்சிகள் அரங்கேறின. அர்ஜென்டினா அணியின் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர் ‘சேட்டன்கள்’. இந்நிலையில் மெஸ்சி மற்றும்  எம்பாப்வே ஜெர்சியுடன் திருமணம் செய்துகொண்ட கேரள ஜோடியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

image
கொச்சியைச் சேர்ந்த சச்சின் – அதிரா ஜோடிதான் அர்ஜென்டினா, பிரான்ஸ் வீரர்களின் ஜெர்சியை ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சச்சின், அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகர் ஆவார். அதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்வேயின் தீவிர ரசிகை. இதனால் இருவரும் திருமண ஆடைகளின் மேல் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
image

இவர்களது திருமண தேதி டிசம்பர்18 என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்ததால் மணமக்கள் மெஸ்சி, எம்பாப்வே டி ஷர்டுடன் திருமண கோலத்தில் இருந்தனர். இந்தப் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து, பலரும் `இதுபோன்ற நிகழ்வுகளெல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்’ எனக்கூறிவருகின்றனர்.

தவற விடாதீர்: வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா.. 1500 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாடிய ஓட்டல் ஓனர்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.