“இந்தியன் -2 படத்தில் நடித்தேன்; அவர்கள் நம்மைவிட அறிவாளிகள்" – பாலிவுட் நடிகர் பியூஷ் மிஸ்ரா

பாலிவுட்டின் தொடர் தோல்விகள் குறித்து சில இயக்குநர்களும், நடிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகரும், பாடகருமான பியூஷ் மிஸ்ரா தென்னிந்திய படங்கள் மற்றும் இயக்குநர்கள் குறித்து பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், “ தென்னிந்திய திரைப்படத் துறையின் இயக்குநர்கள் அறிவாளிகள், அதிக IQ உடையவர்கள், எங்களுடன் (பாலிவுட் இயக்குநர்கள்) ஒப்பிடும்போது மிகவும் புதுமையானவர்கள். நாம் எப்போதும் ஒரே ஃபார்முலாவில் வேலை செய்து கொண்டிருப்பது நம்முடைய  முட்டாள்தனம். சமீபத்தில் இயக்குநர் ஷங்கருடன் இந்தியன் 2 என்ற தென்னிந்தியப் படத்தில் நடித்தேன். அவருடன் பணியாற்றிய முதல் அனுபவத்திலேயே அவர் எவ்வளவு புதுமையானவர் என்பதை உணர்ந்தேன்.  

பியூஷ் மிஸ்ரா

தமிழ் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகள் மற்றும்  அதன் கலாசாரங்கள் மிகப் பழைமையானவை. அதனால் அங்குள்ள திரைப்பட இயக்குநர்கள் தாங்கள் இயக்கப்போகும் படங்களை நன்றாக ஆராய்ச்சி செய்து அதன்பின் இயக்குகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதன்பின்  பாலிவுட்டில் பல படங்களுக்கு பாய்காட் பிரசாரம் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து அவரிடம் கேட்கும்போது, “பாய்காட் கலாசாரத்தில் சரியான விஷயங்களும் உண்டு. தவறான விஷயங்களும் உண்டு” என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.     

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.