கல்விதான் ஒரு சமூக மேம்பாட்டிற்கு அடிப்படையென கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று (19) மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜோதிராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்இ மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன், சிரேஷ்ட சமூக சேவகர் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், துறைசார் அதிகாரிகள், சாதனையாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.