நத்தம்: நத்தத்தில் வீட்டு தோட்டத்தில் பிடிபட்ட தேவாங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது வீட்டின் பின்பகுதியில் தோட்டம் அமைத்துள்ளார். நேற்று அங்கு மரம் மற்றும் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், அங்குள்ள மரத்தில் தேவாங்கு ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தார்.
இது குறித்து நத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தேவாங்கை பிடித்து, நத்தம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். தேவாங்கை பார்ப்பதற்கு அப்பகுதிமக்கள் ஏராளமானோர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.