கொரோனா ருத்ர தாண்டவம்… திங்கள் முதல் மீண்டும் பள்ளிகள் மூடல்… ஷாங்காய் ஷாக்!

கொரோனா வைரஸ்
… பேரை கேட்டாலே சற்று கலக்கம் ஏற்படத் தான் செய்கிறது. நோய்த்தொற்று முற்றிலும் நீங்கிவிட்டது என்று இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில் சீனாவில் மீண்டும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. இதே சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா பரவத் தொடங்கியது என்ற பிளாஷ்பேக் பலருக்கும் நினைவில் தோன்றுவதை மறுக்க இயலாது.

மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

அதே சீனாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது கொரோனா வைரஸ். குறிப்பாக அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஷாங்காயில் பள்ளிகளை மூடும் அளவிற்கு நிலவரம் கலவரமாய் மாறியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே சீனாவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

பருவநிலை மாற்றத்தால் 30 நாடுகளில் காலரா பரவல் – WHO எச்சரிக்கை!

உச்சம் தொடும் தினசரி பாதிப்புகள்

ஏப்ரல் மாதம் (தினசரி பாதிப்பு 1.5 லட்சத்திற்கு மேல்) திடீரென நோய்த்தொற்று அதிகரித்தது கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வைரஸ் பரவல் குறைந்தது. இந்நிலையில் நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் நிலைமை மாறத் தொடங்கியது.

அலைமோதும் நோயாளிகள்

புதிய உச்ச்சத்தை நோக்கி கொரோனா பாதிப்புகள் நகர்ந்தன. அதுவும் ஏப்ரலில் பரவியதை விட டிசம்பர் மாதம் மிகப்பெரிய உச்சம் (தினசரி பாதிப்பு சுமார் 2.5 லட்சம்) தொட்டது. இந்த சூழலில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

மூடப்படும் பள்ளிகள்

*
நோயாளிகளை சமாளிக்கும் வகையில் தற்காலிக மருத்துவமனைகள், அவசர சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

*
ஷாங்காய் நகரின் சில பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*
வரும் திங்கள் முதல் நர்சரி மற்றும் அங்கன்வாடிகள் அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடக்கப் பள்ளிகளும் மூடப்படுகின்றன.

*
நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் வரும் 19ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தை பெத்துக்கிட்டா ரூ. 3 லட்சம்… அடடே இந்த திட்டம் சூப்பரா இருக்கே!

பெய்ஜிங் நிலையும் இதேதான்

இதேபோல் பெய்ஜிங் நகரிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவில் வாட்டி எடுத்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது வழக்கமான ஒன்றாக மாறிப் போய்விட்டது. சாதாரண சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் போதிய பரிசோதனைகள் செய்வதில்லை என்று சொல்லப்படுகிறது.

மார்ச்சில் 3வது அலை

வழக்கமான விஷயங்கள் எனக் கடந்து போக நினைப்பவை தான், தற்போது விபரீதமாக மாறி நிற்கின்றன. எனவே பரிசோதனைகளை மட்டும் ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படியே போனால் வரும் மார்ச் மாதம் மூன்றாவது அலையை சீனா சந்திக்க வேண்டி வரும். அதற்குள் உரிய தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.