வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். அதேபோல் 16 லட்சம் பேர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது என தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அந்நாட்டு அரசு தளர்வுகள் விடுத்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் சந்திரப் புத்தாண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருக்கிறது. அதேபோல் மருத்துவமனைகளின் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் கூறுகையில், அடுத்த 3 மாதங்களில், சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 16 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும்.பெய்ஜிங்கில் உள்ள மயானங்களில் சடலங்களை அடக்கம் செய்யும் பணி 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மயானத்திலும் நாளொன்றுக்கு 2,000 சடலங்கள் கொண்டுவரப்படுகின்றன. பிணவறைகள் அதிக சுமையுடன் உள்ளன.

தொற்று வேகமாக பரவுவதால் 90 நாட்களில் 87 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்படுவதையும், பல லட்சம் பேர் மடிவதையும் உலகம் பார்க்கும்
சீன கம்யூனிஸ்டு கட்சியின் தற்போதைய குறிக்கோள், யார் இறந்து விடுவோம் என்று நினைக்கிறார்களோ இறக்கட்டும் என்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement