ஜனவரி 4 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்! அரசு அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 4 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தமிழகஅரசு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது.

ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல் நாள் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு முன்பு, முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும்,  புதிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.  மேலும், நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு அனுமதி பெறுதல், புதிய தொழில் திட்டங்களைத் தொடங்குவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக அமைச்சரவையின் 35வது அமைச்சராக உதயநிதி பதவி ஏற்றுள்ளதுடன், 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.